Home Blog An explanation for sister in law

An explanation for sister in law

1
80
FAMILY

நாத்தனார் என்பதற்கு விளக்கம்
திருமணமான ஒரு பெண்ணுக்கு,
அவளுடைய கணவனின் தங்கையைத் தான்
நாம் நாத்தனார் என்ற உறவு முறையில் அழைக்கிறோம்.
நாத்துணையாள் என்பதே
காலப்போக்கில் மருவி நாத்தனார் என்றானது
அதாவது,திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் ஒரு பெண்ணுக்கு,
தன் கணவன் வீட்டில் இல்லாத சமயத்திலோ, அல்லது வீட்டு வேலைகள் முடிந்து ஓய்வாய் இருக்கும் நேரத்திலோ, அந்தப் பெண்ணுக்கு,பேச்சுத் துணையாக இருப்பது,ஏறக்குறைய வயதுடைய நாத்தனார் மட்டுமே.
ஆகவே அந்த பெண்ணின் நாவுக்கு ( பேச்சுக்கு ), துணையாய் இருப்பதால் நாத்துணையாள் என்று அழைக்கப்பட்டாள்
அந்த அற்புதமான சொல் மருவி, தற்பொழுது நாத்தனார் என்று ஆனது
ஆகவே தற்பொழுது வழக்கத்திலுள்ள தவறான நாத்தனார் என்று அழைப்பதை விடுத்து இனி நாத்துணையாள் என்று அழைப்பது சிறப்பானது
விக்ரம் சூரிய வர்மா

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here