நாம் தகுதி பார்த்து ரேஷன் கடையில் போய் நிற்காமல் இருக்கும் தன்னிறைவு இங்கு கிடைக்குமா?
இங்கே பொருளாதாரம் சார்ந்த தன்னிறைவு என்பது சாத்தியமற்றது .
உலக பொருளாதார மையமான அமெரிக்க அதிபர்களை நோக்கினால் ரீகனை தவிர்த்து வாசிங்டன் தொட்டு வந்த அதிபர்கள் பெரும்பாலும் பெரும் வழக்கறிஞர்கள் ,பொருளாதார நிபுணர்கள் அதிபராக வந்து நாட்டை தொழில் வளம் கொழிக்க வைத்தும் உலகத்தை சுரண்டி தன் நாட்டு முதலாளிகள் , தன் மக்கள் சுபிச்சமாக இருக்கும் பொருளாதார கொள்கைகளை வகுத்து தற்போதைய நவீன காலம் வரை சீராட்டி வைத்துள்ளார்கள் .
ரஷியா, சீன, கியூபா, வியட்நாம் மக்கள் பொருளாதாரம் சார்ந்தும் முதலாளிகளின் பொருளாதாரத்தையும் இணைத்து வகுத்து கொண்டு நிலைநிறுத்திக்கொண்டார்கள் .
அரபு நாடுகள் தன் எண்ணெய் வளத்தை உலகமயமாக்களில் திளைத்து அந்த நாட்டையும் அவர் மக்களையும் உயர்நிலை தருவித்தார்கள் என்று உலக வரலாறு கூறுகிறது.
இப்படிபட்ட அமைப்பு முறை நம் நாட்டில் எங்கே இருக்கிறது.
மண்ணை குழியிட்டு தேடினாலும் ,பழம் பானையில் கைவிட்டு துழாவினாலும் இங்கே வெற்று பானை தான் கிடைக்கிறது.
இப்படி இருக்கும் போது எப்படி நமக்கான தன்னிறைவு கிடைக்கும். நாம் ரேஷன் கடையில் போய் நிற்பதுதான் சரியானது.
வருடம் வருடம் நிவாரணம் மட்டும் கொஞ்சம் கூடி வரும் அதையும் வரிசையில் நின்று பெற்று கொள்வதுதான் சிறந்தது என்ற மனநிலையில் பயணிப்போம்.
மு.து.பிரபாகரன்.
தற்போதைய சுழலை தெரிந்து கொள்ள
அருமை