இன்னும் சில நாட்களில்
வருடம் கடக்கும் துயரில்
பனியாக உருகுகிறது.
நாட்காட்டி …
எத்துனை இடர்களை
இரு முட்களில் சுமந்து
மாந்தருக்கு நல் நேரத்தை காட்டி…
இறுகிய கடிகாரம் நீராக உருகுகிறது …
காலத்தின் சுவடுகளை
உரைத்த ஏடல்லாமல்
நாழிகளில் உனக்கு காண்பித்த நேரலை
இறுதியாத்திரை செல்கிறது
இன்னும் சில நாளில்…
நீ என்ன செய்தாய் …
இந்த பனி கூழாக உருகும் கடிகாரத்தை …
மறைந்த நாட்களை நீ
கேட்டு பார்
உன் பாதசுவடை நீ அறிவாய்…
நல் நாட்களா? கப்படைந்த நாட்களா?
எதை நீ கடந்து வந்தாய்
போன வருட நாட்களில் …
பனி கட்டியாக உருகுது
காலசக்கரம்…
எம்மக்கள் துர்நாற்றத்தை துடைத்தாயா
உன் விரல் நுனிகளில்…
ஏன் இந்த நாட்காட்டி
இறுகிய தன்மை இழக்கிறது …
உன் மன பிம்பத்தை கேட்டு சொல் …
இன்னும் சில நாட்களில்
வருடம் கடக்கும் துயரில் பனியாக உருகிறது நாட்காட்டி …
மு.து.பிரபாகரன்.
27-12-2020.