இரண்டாம் உலக யுத்தமும் அழகிய டாலர் பரிணாமமும்
  • Save
2nd world war

இரண்டாம் உலக யுத்தமும் அழகிய டாலர் பரிணாமமும்

இரண்டாம் உலக போரில் ரஷியா ஜெர்மனியை வென்று 75 -ஆண்டு நினைவு நாள் (24- 6-2020 தேதி ) அன்று ரஷியா விழாவில் இந்தியா ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டார்.

இந்த போரின் பித்தலாட்டத்தை நோக்குவோம்.

கோயபல்ஸ் வாய் மொழி தத்துவத்தை உருவாக்கிய உலக சமூகத்தின் முதல் எதிரி பால் யோசப் கோயபெல்ஸ் .
ஹிட்லர் என்ற மிருகம் உலகில் பிறக்காமல் இருந்தால் கோயபல்ஸ் ,இரண்டாம் உலக போரும் நடக்காமல் இருந்திருக்குமே என்று வரலாற்றை புரட்டும் போது புலப்படுகிறது.


யார் இந்த ஹிட்லர். யார் இந்த கோயபல்ஸ்.


Hitler and Goebbels
  • Save

ஜெர்மனிய எல்லையில் உள்ள ஆஸ்திரியாவின் எல்லை பிரிப்பில் விடுப்பட்டு எந்த நாட்டினுடன் இணைக்காமல் போன
இன் ப்ரானோ என்ற குக்கிராமத்தில் ஹிட்லர் பிறந்து வளர்ந்து, தந்தை சொல்லில் இனக்கம்
தவறி ஒவியம் தான் படிப்பேன் என்று பிடிவாதம் தருவிக்கொண்ட தருணம் அவர் பதிமூன்று வயதில் தந்தை மூச்சு நின்று போனதும் ஒவியப்பள்ளியில் சேர்ந்து பயின்ற போது தாயும் இறந்ததும் கடும் வறுமையில் துள்ள துடித்து ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா போய் சேர்ந்து கூலி வேலை செய்தார். ஒய்வு நேரத்தில் ஜெர்மனி அகண்ட பிரதேசமாக வர வேண்டும் என்று திட்டமிட தொடங்கினார்.

ஆஸ்திரியாவில் அதிகார வர்கத்திலும் மீடியாக்களிலும் யூதர்கள் ஆளுமை அதிகமாக இருந்ததால் யூதர்களை தன் கருவிழியின் கூர் ஊசிகளை கொண்டு பார்த்ததில் அவர்களை ஒழித்தால் ஜெர்மனியர்கள் முழுசுதந்திரம் பெற முடியும் என்று ஹிட்லருக்கு ஏற்பட்ட தீர்மானமாக இருந்து
அவர் இராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்து அதிலும் அலுத்து அரசியலில் குதிக்க நேஷ்னல் சோஷியலிஸ்ட் ஜெர்மன் ஒர்க்கர்ஸ் பார்டி கட்சி (இதன் சுருக்கம் தான் நாஜி படை ) தொடங்கி அதன் நோக்கம் அழிப்பது ,ஒழிப்பது என்பதை தாங்கி உயர்ந்த வானுயர் மலையில் இருந்து குதிப்பதாக குதித்து , வீசியடிக்கும் புயலில் அசைய முடியாத நங்கூரத்தை பனிபடர்ந்த ஜெர்மன் மண்ணை துளைத்து கொண்டு தன் இட்டுகட்டை நடைமுறை படுத்தவும் பல தில்லுமுல்லை மறைத்து பல பொய்களை வாரியிரைக்க கோயபல்ஸ்சை தன்னுடன் அணைத்து கொண்டு நின்றார் ஹிட்லர்.

அந்த நாட்டின் ஜனநாயகத்தை குலைத்தும் பல பொய்களை பலர் மேல் சுமத்திய குத்தாட்டத்தை நியாயப்படுத்திய கோயபல்ஸ் ஆடிய அசுர நடனத்துக்குதான் இன்றுவரை கோயபல்ஸ் பிரசாரம் என்று வரலாற்று சரித்திரம் புகழ் பெற்று இன்றும் தொடர்வது தான் கோயபல்ஸ் தத்துவம். (தற்போது நம் நாட்டில் கூட 15 லட்சம் நமக்கு வங்கி கணக்கில் வரும் என்பதும் ,சொந்த வீட்டில் வசிப்போம் என்பதும், கருப்பு பணம் இந்திய திரும்பி வறுமை ஒழிந்துவிடும் என்பதெல்லாம் கோயபல்ஸ் பரப்புரையைதான் நாம் கண்டோம்.

ஹிட்லர் ஜனநாயகம் என்ற போர்வையில் குளிரில் நடுங்குவதாக போர்த்திக்கொண்டு அரசியலில் வென்று தன் நாட்டிலே கணக்கற்ற அராஜகம், எண்ணிக்கை அடங்கா கொலைகள் செய்து ஆட்சி முறையை மாற்றியமைத்து கொடூர சர்வாதிகாரியாக அவதாரம் எடுத்து உலகை ஆள புறப்பட முதல் அடியாக தன் எதிரி நாடான ஆஸ்திரியாவை வென்று போலந்தை கபளீகரம் செய்ய புறப்பட்டதும் போலந்துக்கு நேசகரம் நீட்ட பிரிட்டன் நுழைந்த உடன் அதன் நேசநாடான பிரான்ஸ்சும் போரின் காலடி பதித்ததும் அதன் மீதும் மனித உயிர்களை படையல் போட்டு ஹிட்லர் அதையும் தொட்டு ருசித்து தன் சகாவான இத்தாலி அதிபர் முசோலினிடம் மிச்ச படையலை கொடுத்ததும் அவர் பிரான்ஸ்சை ஒரே வாயில் விழுங்கி ஏப்பம் விட்டதும், ஹிட்லரின் விசால பார்வை ரஷியாவின் உள் நுழைந்து அகல கால் வைத்ததும் இரண்டாம் உலக போர் நடுமையம் தொட்டது.

உலக பொருளாதார ரவுடி அமெரிக்க முதல் உலக போரில் ஆயுத விற்பனையில் கொள்ளை லாபம் ஈட்டிய சுவை மறுகணம் நாவில் தட்டிவிட இரண்டாம் உலக போரில் அதே வியாபாரத்தை தொடங்கி செழிக்கும் போது ஜப்பான் அமெரிக்க இரவு தூக்கத்தில் டாலர் ஈட்டிய உல்லாச களிப்பில் இருக்கும் போது 1941 டிசம்பர் 7 ஹவாயின் பேர்ல் துறைமுகம் மீது ஜப்பான் பந்திட்டு படையலை தின்று முடித்து அலுங்காமல் வந்ததும் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் உறக்கம் கலைந்த போது அமெரிக்க தன்மானம் இழந்து ஆட்டம் கண்டு ஜப்பான் மேல் மறுயிரவுக்குள் போர் அறிவித்ததும் இரண்டாம் உலக போர் உச்சத்தை தொட்டது.

ஹிட்லர் தொடர் ஜம்பவானாக பல நாடுகளை விழுங்கி பாகபிரிவினை செய்து கொண்டு வீறுநடை கட்டியதும். அமெரிக்க ,பிரிட்டன் ,ரஷியா துவண்டு கூட்டமைப்பு சேர்ந்து நேசநாட்டு படையாக மாறி நடை தளராமல் செல்லும் போது அமெரிக்க தனி கவனமாக ஜப்பானை பந்தாடியது .

ஹிட்லரை நேசநாட்டு படை குடலை பிடிங்கி மாலியம்மாவாசை மயான படையளுக்கு தயாரான போது 6 – வருடம் மாசானி கொல்லையில் பல நாட்டு உயிர்களை உலக பொருளாதார சங்கம படையலில் பலியிட்டு போர் கடந்து வந்து 1945 -ல் பெர்லினை யார் பிடிப்பது என்ற போட்டி நிலவும் போது ஏப்ரல் 12 -ம் தேதி 1945 அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் மரணம் அடைந்ததும் உதவி ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அதிபராக வந்து போரை நடத்தும் போது சோவியத் யூனியன் தலைவர் ஸ்டாலின் முன்மொழிதலில் ரஷியா படை முன்னேறி நேசநாட்டு படை பெர்லினை முந்திவிட கூடாது என அதீத திட்டத்தில் பெர்லினில் கம்யூனிச கொடி மினுமினுத்து சிகப்பு சூரியனாக வானுயர பறக்கவிட்டு இரண்டாம் உலக போர் முற்று புள்ளி வைத்து முடிவு பெற்றது .

போர் முடிவுக்கு முன் ஹிட்லர் தலைகவிழ்ந்து கர்வநிலை தளர்ந்து ஏப்ரல் 30 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

இரண்டாம் உலக யுத்தத்தை குரூர பார்வை தவிர்த்து பார்த்தால் இது நாடு பிடிப்பு போரா? என்ற கேள்விகள் நம்மை துளைக்கலாம் இது நாடு பிடிக்க நடந்த முதல் உலக போர் அல்ல ,பொருளாதாரம்,வர்த்தகம் என்ற குடுமியை முடிந்து ஆடி பல நாடுகள் எல்லையை தாண்டி வர்த்தக விஸ்தரிப்பு ஆட்டம் தான் இரண்டாம் உலக போர்.

இந்த போர் வர்த்தக விஸ்தரிப்பு போர் என்றால் ஏன் அமெரிக்கா 1945 ஆகஸ்ட் 6 -ம் தேதி ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசி முன்று நாள் இடைவெளி விட்டு 9-ம் தேதி நாகசாகியின் மீது மீண்டும் அணுகுண்டு வீசியது என்று உலக நெஞ்சங்கள் முனுமுனுத்தது.

ஜப்பான் ஆசியாவின் மண்ணை போரிட்டு அதன் அடிழாம் வரை வியாபார விஸ்தரிப்பில் காலுன்றி நெஞ்சை நிமிர்த்து இருந்ததால் அமெரிக்காவின் நரித்தனத்தில் அந்த வியாபாரம் தன் வசமாக்க நடந்த திரைவெளிச்சம் தான் அணுகுண்டு வீழிச்சி என்பதை பின்னால் ஏடுகளின் குறிப்புகள் காட்டியது.

இந்த போருக்கு பின் அமெரிக்க ஆசியாவிலும் காலுன்றியதும் ,ரஷியா கம்யூனிச சிவப்பு கம்பளத்தில் அதுவும் தன் வியாபாரத்தை எல்லை தாண்டி உலகளவில் விஸ்தரித்து கொண்டது.

மு.து.பிரபாகரன்

Leave a Reply

Close Menu
Copy link
Powered by Social Snap