சென்னை, மே 22: சமீபத்தில் Blooup TV என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட ஒரு பொதுமக்கள் கருத்துக் கணிப்பு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியில், 90களில் வாழ்ந்த மக்களுக்கும் 2000களில் பிறந்தவர்களுக்கும் உள்ள வாழ்க்கை மாறுபாடுகள் பற்றிய விவாதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதனால் உண்டான விளைவுகள் பற்றிய விவரங்கள் உணர்த்தப்பட்டுள்ளது.
90களில் இருந்து இன்று வரை வாழ்க்கை முறை எப்படி மாறி வந்தது என்பதை பலர் பகிர்ந்தனர். குக்கர் வந்ததனால், சக்கரை நோய் அதிகரித்தது, கொழுப்பு நீக்கப்பட்ட ஆயிலினால் உடல் பல இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. 40 வயதுக்கு மேற்பட்டோர் பெரும்பாலானோர் கால் வீக்கம் சந்தித்துள்ளனர். பிராய்லர் கோழியினால் தைராய்டு பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இந்த மாற்றங்கள் விளைவாக, இன்றைய காலத்தில் பசங்க எல்லாம் ஜங்க் புட் அதிகமாக சாப்பிடுகின்றனர்.
“நாங்கள் இப்படி இருந்தது கெடயாது” என்று 90களில் வாழ்ந்தவர்கள் பகிர்ந்தனர். இந்த காணொளி இன்ஸ்டாகிராமில் reels வடிவில் வெளியிடப்பட்டது, இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதுடன், 35,000 க்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றுள்ளது.
இந்த முழு வீடியோவை யூடியூப் சேனலில் பார்க்கலாம், மேலும் பலனடையலாம்.
இணைப்புகள்: