GadgetTamil News

அமேசானில் OnePlus 11R மொபைலுக்கு வழங்கப்படும் அதிரடி சலுகை

நீங்கள் புதிய மொபைலை வாங்க திட்டமிட்டு உள்ளீர்களா? அப்படி என்றால், அமேசான் பிரபல மொபைல் பிராண்டான ஒன்பிளஸின் 11R 5G மொபைலுக்கு ஒரு சிறந்த டீலை தற்போது கொடுக்கிறது.

பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான அமேசான் தற்போது OnePlus 11R 5G மொபைலின் விலையை சுமார் 25% வரை குறைத்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் 11R 5G மொபைலின் விலை இப்போது ரூ.39,999-லிருந்து கணிசமாக குறைந்து ரூ.29,999-ஆக இருக்கிறது. அதாவது ஃபிளாட் ரூ.10,000 டிஸ்கவுண்ட்டில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. சோலார் ரெட் உட்பட இந்த மொபைலின் அனைத்து கலர் வேரியன்ட்ஸ்களுக்கும் இந்த புதிய குறைக்கப்பட்ட விலை அமலில் உள்ளது. ஒன்பிளஸ் வெப்சைட்டில் இதன் ஒரிஜினல் விலை ரூ.45,999-ஆக உள்ளது.

இந்த டீலை எப்படி பெறலாம்?

உங்களின் அமேசான் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து, மேலே இருக்கும் சர்ச்பாரில் OnePlus 11R 5G என்று டைப் செய்து தேடவும். அங்கு இந்த மொபைலின் அசல் விலையை விட 25 சதவீதம் குறைக்கப்பட்ட விலையில் இந்த மொபைல் விற்பனைக்கு வந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். இந்த மொபைலை வாங்குவோருக்கு அமேசான் மேலும் சில ஆஃபர்களை வழங்குகிறது. இந்த ஆப்ஷன்களில் நேரடியாக இந்த மொபைலை ரூ.29,999-க்கு வாங்கலாம் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து ரூ.28,000 வரையிலான சேமிப்புடன் வாங்கலாம்.

இயல்பான EMI ஆப்ஷன்:

இந்த மொபைலுக்கான சலுகைகளில் EMI-ல் வாங்கும் ஆப்ஷனும் அடங்கும். அமேசான் பே கிரெடிட் கார்டில் பேங்க் ப்ராசஸிங் கட்டணத்துடன் மட்டுமே ‘நோ காஸ்ட் இஎம்ஐ’ ஆப்ஷன் பொருந்தும். தவிர, அமேசான் கிரெடிட் கார்டு மூலம் இந்த மொபைலை மேலும் விலை குறைத்து ரூ.27,999-க்கு வாங்கலாம்.

வங்கி சலுகைகள்:

மற்றொரு குறிப்பிடத்தக்க வங்கி சலுகையாக கனரா வங்கி கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. அனைத்து கனரா வங்கி கார்டுகளுக்கும் ரூ.2,000 தள்ளுபடியும், கிரெடிட் கார்டுக்கு கூடுதலாக ரூ.500 தள்ளுபடியும் அமேசான் வழங்குகிறது. குறைந்தபட்ச கொள்முதல் மதிப்பாக ரூ.5000 மதிப்பிற்கு பொருட்களை வாங்கும் போது அனைத்து வங்கிகளின் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் ரூ.2,000 ஃபிளாட் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம்.

OnePlus 11R 5G மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

இந்த மொபைலில் 2772 X 1240 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சக்திவாய்ந்த சிப்செட்டான குவால்காம் நிறுவனத்தின் Snapdragon 8 Gen 1 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மொபைல் 100W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய 5000mAh பேட்டரி பேக் கொண்டுள்ளது.

இந்த டிவைஸில் ப்ளூடூத் 5.3, Wi-Fi 6, NFC மற்றும் மல்டிபிள் சேட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம்களுக்கான சப்போர்ட்டும் உள்ளது. 11R 5G மொபைல் Android 14-ஐ அடிப்படையாகக் கொண்ட லேட்டஸ்ட் ஆக்ஸிஜன் OS 13-ல் இயங்குகிறது. இதன் பின்புறம் ஆப்டிகல் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் கூடிய Sony IMX890 50-மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கம் 16-MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி சலுகையை பயன்படுத்தி புதிய OnePlus 11R 5G மொபைலை வாங்கி புதிய அனுபவத்தை காணுங்கள்!

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *